பகிர்வு 3

திருமதி ஷர்மிளா தேவி
ம செ க சமூக நிறுவனம், Sparkletots (பூன் லே, கட்டட எண் 262)
தன்விவரம்
திருமதி ஷர்மிளா தேவி, ம.செ.க சமூக அறநிறுவன பாலர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் இளம் பருவக்காலக் கல்வியில் இளங்கலைப்பட்டம் பெற்றவர். இவர் பல ஆண்டுகளாகப் பாலர் பள்ளியில் ஆங்கிலமும் தமிழும் கற்பித்து வருகிறார். அர்த்தமுள்ள வெளிப்புற நடவடிக்கைகள் பிள்ளைகளின் மொழித்திறன்களை வளர்க்கப் பெரிதும் உதவுகின்றன என்பதை இவர் தமது அனுபவத்தின் வாயிலாகக் கண்டறிந்துள்ளார். பிள்ளைகளுக்கு ஆரம்பக் காலத்திலேயே தமிழ்மொழிமீது பற்றுதலை ஏற்படுத்துதல் அவசியம். இது மொழிப் பயன்பாட்டில் அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கப் பெரிதும் உதவும்.
வெளிப்புற நடவடிக்கைகளின்வழித் தமிழ்மொழி கற்றல்
சுருக்கவுரை
வெளிப்புற நடவடிக்கைகள் பிள்ளைகளுக்கு வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். உண்மையான வெளிப்புறச் சூழலில் பிள்ளைகளுக்குத் தமிழ்மொழி கற்பிக்கப்படும்போது, அது அதிக ஈடுபாட்டுடன், அர்த்தமுள்ளதாக, வெளிப்படையானதாக மாறுகிறது. இதனால், ஆராய்தல், சிந்தித்தல், விசாரித்தல், கேட்டல், பிரதிபலித்தல் ஆகியவற்றின்மூலம் தமிழ்மொழி கற்றல் வளமடைகிறது. இந்தப் பகிர்வில் வெளிப்புறக் கற்றலின் நன்மைகள், பிள்ளைகள் எவ்வாறு புதிய கண்டுபிடிப்புகளை மகிழ்வூட்டும் முறையில் அறிந்துகொள்கிறார்கள் என்பனவற்றை அறிந்துகொள்வார்கள்.